Annai Vailankanni Arts and Science College, Thanjavur.

தமிழ்த்துறை

தமிழ்த்துறையின் நோக்கம்

                      “ தாய்மொழியைக் கற்போம்!  தாய்மொழியால் தரம் உயர்வோம்!”

கல்‌ தோன்றி மண்‌ தோன்றா காலத்தே தோன்றியது நம்‌ தாய்‌ மொழியாம்‌ தமிழ்‌ மொழி. தமிழ்‌ மொழியானது உலக மக்களே ஆர்வமுடன்‌ கற்கும்‌ வகையில்‌ அமைந்துள்ளது. இவ்வகையிலேயே நம்‌ பல்கலைகழகப்‌ பாடத்‌திட்டமும்‌ மாணவர்களுக்கு மொழிப்பற்றை உண்டாக்கும்‌ வகையில்‌ அமைத்துள்ளது. மாணவர்கள்‌ இதனைக்‌ கற்று மேன்மையடையும்‌ வகையில்‌ நம்‌ கல்லூரியில்‌ இளங்கலைத்‌ தமிழ்ப்‌ பாடப்பிரிவு தொடங்கப்‌ பெற்று சிறந்த முறையில்‌ இயங்கி வருகின்றது.

தமிழ்த்துறையின்‌ குறிக்கோள்:
  • கன்னித்‌ தமிழை ஒலிக்கும்‌ முறையறிந்து தெளிவாக உச்சரிப்பார்கள்‌.
  • தமிழைப்‌ பிழையில்லாமல்‌ எழுதுவார்கள்‌.
  • பண்புள்ளவர்களாகவும்‌, சிறந்த படைப்பாளர்களாகவும்‌ மாறுவார்கள்‌.
  • வாழ்வியலைக்‌ கற்பதால்‌ தமிழ்‌ மரபுடன்‌ ஒழுக்கமுள்ளவர்களாக சமுகத்தில்‌ இடம்பெறுவார்கள்‌.
  • தமிழ்நாடு அரசுத்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ அனைத்துப்‌ போட்டித்‌தேர்வுகளிலும்‌ கலந்து கொண்டு வெற்றி பெறும்‌ வாய்ப்பைப்‌ பெறுவார்கள்‌.
    கற்றலின்‌ விளைவுகள்‌:
    • இளங்கலைத்‌ தமிழ்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ அனைத்துத்‌ துறைகளிலும்‌ வேலைவாய்ப்பைப்‌ பெறமுடியும்
    • சிறந்த பேச்சாளனாகவும்‌ , கதாசிரியராகவும்‌, எழுத்தாளராகவும்‌ தன்னை நிலைநாட்ட முடியும்‌.
    • பண்பலை வானொலி, தொலைக்காட்சிகளில்‌ செய்தி வாசிப்பாளராகவும்‌, நிகழ்ச்சித்‌ தொகுப்பாளராகவும்‌ சிறந்து விளங்க முடியும்‌.
    • சிறந்த கவிஞனாகவும்‌, செய்தித்தாள்களிலும்‌ இதழ்களிலும்‌ பணியாற்ற முடியும்‌.
    • போட்டித்‌ தேர்வுகளில்‌ வெற்றி பெற்று ஒரு அரசாங்கப்‌ பணியைப்‌ பெறமுடியும்‌. பட்ட மேற்படிப்பு பயின்றால்‌ அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ தமிழாசிரியராகவும்‌, அனைத்துக்‌ கலைக்‌ கல்லூரிகளிலும்‌ தமிழ்ப்பேராசிரியராகவும்‌ பணியாற்றலாம்‌.
கற்றல் வளங்கள்

1. அருஞ்சொற்பொருள்கள்

2. பல்கலைக்கழகத் தேர்வில் தொடர்ந்து கேட்கப்படும் வினாக்கள்

3. பல்கலைக்கழகத் தேர்வின் மாதிரி வினாத்தாள்கள்

4. மாணவர் கையேடு

5. வினா வங்கி

துறை வரலாறு:

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது தஞ்சை மாவட்டத்தில் நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வியை 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. கல்லூரி தொடங்கப் பெற்ற நாள் முதல் 12 ஆண்டுகளாகத் தமிழ்த் துறை சீரும் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. 2019 – 2020 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்த்துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்கள் உள்ளடக்கிய இளங்கலைத்தமிழ் பட்டப் படிப்பு தொடங்கப் பெற்றது. 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் 22 மாணவர்களும், 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் 07 மாணவர்களும் தமிழ்ப் பட்டப்படிப்பில் பயின்று வருகிறனர். தமிழ் இலக்கண , இலக்கியத்தின் பெருமைகளை மாணவர்கள் உணரும் வகையிலும் , பாரதிதாசன் பல்கலைக் கழகப் பாடத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கும் வகையிலும் பாடங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றது. நம் துறையின் சார்பாக பன்னாட்டுக் கருத்தரங்கம், தேசியப் பயிலரங்கமும் மாணவர்கள் பயனுறும் வகையில் நடத்தப் பெறுகின்றது. மேலும் தமிழ்த் துறையில் இலக்கியப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவருக்கு “சுடர் ஒளி” பட்டமும் ஆண்டுதோறும் வழங்கப்பெறுகிறது.

Prgrammes offered:
Under Graduation
# Name of the Programme Student Intake
1 Bachular of Tamil 40
Student Strength:
# BATCH TOTAL NO OF STUDENTS BOYS GIRLS
1 2019-2020 22 13 9
2 2020-2021 7 3 4
3 2021-2022
ஆய்வுகள்:
ஆய்வு நெறியாளர்:
முனைவர் பட்ட ஆய்வு நெறியாளர் – 1
  • 1. முனைவர் போ.புவனேஸ்வரி
சாதனைகள்:

விரைவில் வெளியிடப்படும்

நிகழ்வுகள்:

விரைவில் வெளியிடப்படும்